26 Mar 2016

யானைகளுக்கான தடுப்பு வேலிகள் அமைத்துத் தருமாறு வனப் பாது அமைச்சரிடம் வெள்ளிமலை கோரிக்கை.

SHARE
இலங்கையில் சுமார் 30 வருடகாலமாகக் காணப்பட்ட  அசாதாரண சூழல், காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் படுவான்கரைப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களாகும். இம்மக்கள் அக்காலகட்டத்தில்,
சொல்லொணாத் துயரங்களையெல்லாம், அனுபவித்து அதிலிருந்து தற்போதும் மீளமுடியாத வண்ணம் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். யானைகளுக்கான தடுப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு  வனபாதுகாப்பு அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை (25) அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது…..

பல ஆயிரக்கணக்கான உயிர்களை குறித்த காலப்பகுதியில் பறி கொடுத்து, இருழ் சூழ்ந்த இம்மக்களின் வாழ்வில், இந்த நாட்டில் நல்லாட்சி அரசரங்கம், ஆட்சி அமைத்த பின்னரும், இருள் நீங்கி ஒளி வீசவில்லை, ஏனெனில் இவர்கள் 30 வருடகாலம், காணப்பட்ட அசாதாரண சூழ் நிலையிலிருந்து, மீள நினைக்கின்ற வேளையில், வனஜீவராசியானது, இவர்களது உயிர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்றவற்றை, சேதப்படுத்திகின்றது.

ஒரு வருடத்தில் சராசரியாக, 40 உயிர்கள் யானைகளினால் பரிதாபமாக காவு கொள்ளப் படுகின்றமை கவலைக்குரிய விடையமாகும். இதுமட்டுமின்றி விவசாயிகளுடைய, பல ஏக்கர் கணக்கான, விளை நிலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிக்கப் படுகின்றமையும், வேதனைக்குரிய விடையமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல உயர் அதிகாரிகளுக்கும், இவ்விடையம் தெரிந்திருந்தும், இருவரையில் முன்நேற்றகரமான எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை என்பதனை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். நாளாந்த உழைப்பினைக் கொண்டு தங்கள் வாழ்வினை நடாத்திவரும், இம்மக்களுடைய துயரங்களை இந்நாடு மறறும் மக்கள் மீது  அதிக அக்கறை உள்ளவர் தாங்கள் என்ற வகையில் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இனிவருகின்ற நாட்களிலாவது, படுவான்கரை மக்களின் நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டுமாயின் யானைகளுக்குரிய தடுப்பு வேலிகளை அமைத்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில். இப்பகுதி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் கோரிக்கை விடுக்கின்றேன். என அக்கடித்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: