கருணா அம்மானின் முகப்பு புத்தகத்தில் இன்றயத்தினம் பதிவேற்றியுள்ளதை வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.
தற்போது தமிழினி எளுதிய புத்தகம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது இதை நான் முன்பு கூறிய போது ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக துரோகி பட்டம் சூட்டினீர்கள் ஒரு ஆயுத போராட்டத்தின் வெற்றி அதை அரசியல் வடிவமாக்கும் போதுதான் முழுமைபெறுகின்றது .
அதைத்தான் நான் சொய்யமுற்பட்டேன் மாறாக துரோகி என்றும் பிரதேசவாதம் பேசுகின்றான் என்று தட்டி கழித்தீர்கள் இப்போது என்ன கூறபோகின்றீர்கள் தமிழினியை துரோகி என்று கூறபோகின்றீர்களா அவ்வாறு உங்களால் கூற முடியாது ஏனென்றால் அவரின் மரணத்தை பாரிய தியாகமாக உலகம் முளுக்க எடுத்து காட்டியவர்கள் நீங்கள்
உண்மையிலையே தமிழினியுடன் நெருங்கிபளகியவன் என்ற வகையில் நானும் மதிக்கின்ற ஒருவர்தான் தமிழினி ஏன் புலிகளின் பல தவறுகள் உங்களுக்கும் நன்கு தெரியும் ஆனால் உங்களுக்கு எழுதுவதற்கு துணிவில்லை அவ்வாறு எளுதினால் தங்களையும் துரோகி என்பார்களோ என்ற அச்சம்தான்காரணம் ஆனால் இனியாவது உண்மையை எழுதுங்கள் அது எங்களுடைய தமிழ்சமுகத்திற்கு பலத்தை கொடுக்கும் ஏன் என்னையும் பல தேவையில்லாத விடையங்களுடனும் பல கொலைகளுடனும் சம்பந்தப்படுத்தி எழுதினீர்கள் ஆனால் தற்போது அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது சம்பந்தபட்டவர்கள் யார் என்பது தற்போது உங்களுக்கு நன்கு விளங்கும்,
உயிர் கொலைகளை தவிற்க வேண்டும் என்பதற்காகவே நான் வெளியேறினேன் அதை தவறாக திரிவுபடுத்தினீர்கள் தற்போது உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தற்போது கிழக்கு முஸ்லிம்களிடமும் சிங்களத்திடமும் பறிபோகின்றது வடக்கில் மன்னார் வன்னி பறிபோகின்றது போராளிகுடும்பங்கள் பட்டினியால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் நடந்தவற்றை கூறிக்கொண்டு காலத்தை கடத்தாமல் உறுதியான கட்டமைப்பை வட கிழக்கில் உருவாக்கவேண்டும் தமிழ்தேசியகூட்டமைப்பை இனி நம்பமுடியாது வெறும் அதிகாரமில்லாத பதவிகளை எடுத்துக்கொண்டு அரசிடம் மண்டியிட்டு கிடக்கின்றார்கள் .
நீங்கள் வாக்களித்த விஜையகலாமகோஸ்வரன் ஆடம்பர அரங்கேற்றம் நடத்துகின்றார் அதில் பங்குபற்றிய ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் பற்றை வெளிகாட்டியுள்ளார் அங்கால் தமிழர்களை ஈனபிறவிகள் என்று அமிரலி கூறும்போது முஸ்லிம்காங்கிரஸ் மேடையை சம்பந்தர் அலங்கரிக்கின்றார் இவர்களா தமிழர்களுக்கு உரிமையை பெறப்போகின்றார்கள் ஒரு நாள் கல்முனையின் எல்லை பலகையை பெரியகல்லாத்தில் முஸ்லிம்மானகர மேயர் நிறுவியபோது அன்று அரசில் அமைச்சராக இருந்த நான் பட்டப்பகலில் அதை உடைத்தெறிந்தவன் நான் அதனால்தான் கூறுகின்றேன் .
குரோதங்களை மறந்து எதிர்காலத்தில் உறுதியான தலமைத்துவங்களை நாம் உருவாக்கவேண்டும் இது புலம்பெயர்ந்து வாளுகின்ற மக்களிடம் பாரிய பொறுப்பிருக்கின்றது ஒரு அரவிந்தன் அந்தோனிபள்ளை போதாது பல அரவிந்தன் உருவாவேண்டும் அதற்காகத்தான் இன்றும் நாங்கள் களத்தில் துணிந்து நிற்கின்றோம் எங்கள் உயிர் பெரியதல்ல தமிழனின் தன்மானம்தான் பெரிது. நன்றி
0 Comments:
Post a Comment