பேனா எனும் ஆயுதத்தினால் சமூகப் பணி ஆற்றிய சகோதரர் பீ.எம். புன்னியாமீனின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான புன்னியாமீன் காலமானதையொட்டி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பன் நூலாசிரியரான உடதலவின்னவைச் சேர்ந்த புன்னியாமீன் ஆசிரியரின் ஜனாஸா செய்தி அறிந்து அதிர்ச்சியும்
கவலையும் அடைந்தேன்.
அவரின் மறைவால் துயருற்றுள்ள அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிரேஷ்ட இலக்கியவாதியான புன்னியாமீன் 150க்கும் மேற்பட்ட அழியா சொத்துகளான புத்தகங்களை எமக்குத் தந்தவர். அவரின் சேவையை இறைவன் பொருத்திக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பேனாவை ஆயுதமாக ஏந்திய அவர், தன் பணியை சரிவர மேற்கொண்டு இறையடி சேர்ந்துள்ளார். அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment