தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமே அமீரலி எமைச்சாட காரணம் என்கின்றனர் தமிழ் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தளவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளிடையே ஒற்றுமையின்மையினை தற்போது ஒரு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ். அமிரலி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி பேசிய கருத்தானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் என்ற வகையில் எமக்கு ஏற்பட்ட ஆவேசமும், மனக்கிலச்சலும் இதுவரை எந்தவாரு அரசியல் வாதிக்கும் ஏற்பவில்லை என்பது கவலையளிக்கின்றது. இது எதனை உணர்த்துகின்றது என்றால் தேர்தலுக்கு மாத்திரம்தான் நாங்கள் தேசியம் பேசுவோம் என்பதனை உணர்த்துகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும், ஏனைய பொது மக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 'இந்த விடையம் குறித்து மேலும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்...
சிலர் இதற்கான பதிலினை கொடுத்திருந்த போதும் அதற்கான கனதி காணமலுள்ளதும் அதில் அமிரலிக்கு யோசனை கூறியது போன்று யோகேஸ்வரன் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வழியும் செல்லி கொடுக்கப்பட்டுள்ளது.
சிலர் இதில் அறிக்ககை விட்டால் பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமிரலி கூறியது போன்று கொழும்பில் நாக்குவழிக்க முடியாமல் போகும் என்பதற்காக மௌனமாக இருக்கின்றனர், எனவும் எண்ணத் தோன்றுகின்றது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆறு மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதியமைச்சரின் பேச்சிக்கு பதில் கொடுக்காமல் பயந்து ஒழிந்து கொள்ளும் இந்த அரசியல் வாதிகளை ஐ.நா.சபைக்கு அனுப்பினால் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாங்கள் உங்களுக்கு வாக்களித்து ஊரவனின் வாயால் ஏச்சும் வாங்க வேண்டுமா? உங்களுக்கு வாக்களித்ததற்காக இதைவிட அவமானம் வேறென்ன எமக்கு இருக்கப் போகின்றது, எல்லாம் எமது தலைவிதியென்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதுமாத்திரமின்றி புதிய முகம் வேண்டும் என்று நாங்கள் தேர்ந்தெடுத்தோம் அதற்காக புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். மகிந்த இருந்த காலத்திலும் பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமிரலி இப்படி பேசவில்லை இப்போது பேசுவதென்றால் அவருக்குத் தெரியும் எதிர்த்துப்பேச தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாருமில்லை என்று எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment