எதிவரும் 29 ஆம் திகதி செவ்வாய் கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரைக்கும் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையிலிருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட
ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வைத்திய அதிகாரி கு.சுகுணன் வியாழக் கிழமை (24) தெரிவித்தார்.
இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தம் எக்டா(ECTA)> , மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இதில் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகணத்திலுள்ள சுமார் 400 வைத்தியர்கள், மற்றும், மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும், வைத்திய அதிகாரி கு.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
1 Comments:
வெளி நாடுகளுக்கு பணத்த கொடுத்து படிச்சிட்டு வாற வைத்தியர்களை எற்றுக்கொள்ளும் நம் நாட்டு வைத்தியர்களுக்கு ஏன் நம் நாட்டுக்கு பணத்தை கொடுத்து வைத்தியம் படிப்பவர்களை பிடிக்குதில்ல...ஏன் சகோ
Post a Comment