மட்டக்களப்பு - களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (18) சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்று, இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொன்.நாகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, கோட்டக் கல்விப் ப்ணிப்பாளர் த.சோமசுந்தரம், போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் புவநேந்திரன், உட்பட கிராம பொது அமைப்புக்களின் நிருவாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவ்வாலயம் இதுவரையில் புணரமைப்புச் செய்யப்படாமல் இருந்து வருகின்றது. கொட்டகை ஒன்றில் ஸ்ரீ முத்துமாரியம்மனின் விக்கிரகத்தை வைத்து இக்கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது அடிக்கல் நடப்பட்டுள்ள இவ்வாலயத்தின் நிருமானப் பணிக்காக தனவந்தர்களிடமிருந்தும் பரோபகாரர்களிடமிருந்தும் உதவிகளை வேண்டி நிற்பதாக இதன்போது இவ்வாலய திருப்பணிச் சபைத்தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment