மட்டக்களப்பு ஏறவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்-4 குறிச்சி பிரதான வீதியில் செவ்வாய்க்கிமை
மாலை முச்சக்கரவண்டியொன்று வடிகானுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த கோயில் மதில் சுவரில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் சாரதிக்கும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதபோதிலும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் கூறினர
0 Comments:
Post a Comment