5 Mar 2016

ஏறாவூர் பிரதான வீதியில் அதிகாலையில் ஆறு கடைகள் உடைத்து சேதம்

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில் 6 கடைகள் சனிக்கிழமை அதிகாலை 05.03.2016 உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நகைக் கடை ஒன்று, சில்லறைக் கடைகள் 2, தொலைத் தொடர்பு அட்டைகள் விற்கும் கடை ஒன்று, ஒரு சலூன், இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடை ஒன்று என்பனவே இவ்வாறு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அங்கும் இங்கும் வீசி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் பெறுமதியான உடமைகள் எவையும் திருடிச் செல்லப்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது திட்டமிட்ட சதிநாச நோக்கத்தை அடிப்படையாக வைத்து ஏக காலத்தில் ஒரே இடத்தில் தொடராக அமைந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொலிஸார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் விஜயம் செய்து நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு பொலிஸ் அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு பிரதேச வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.








SHARE

Author: verified_user

0 Comments: