இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பலப்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் கருத்துச் சுதந்திரம் ஊடக உரிமைகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகள் தொடர்பான
விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றை சொண் (SOND) எனும் அரச சார்பற்ற அமைப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை (27) மட்டக்களப்பு சின்ன உப்போடையில் அமைந்துள்ள வேகபவுண்டேசனில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் கல்வி பயிலும், பல்கலைக் கழக மாணவர்கள், ஊடகத்துடன் தொடர்புடைய உள்ளுராட்சி மன்ற உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் காலந்து கொள்ளவுள்ளனர்.
சொண் (SOND) அமைப்பின் தலைவர் ச.செந்துராசாவின் தலைமையில் நடைபெறும் இக்கலந்துரையாடலில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கோப்ரி அழகரட்ணம் சிப்பு விருத்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமைகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கான உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல், பங்குபற்றுனர் கருத்துப்பகிர்வுகள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள பிரபல ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கவுள்ளனர்.
0 Comments:
Post a Comment