22 Mar 2016

செம்மை மாதர் விருது வழங்கும் விழா!

SHARE
சமூகத்தில் சிறந்த சேவையாற்றிய நல்மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய மாதர்களை கௌரவித்து செம்மை மாதர் விருது வழங்கி வைக்கும் நிகழ்வு (19) சனிக்கிழமை
மாலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறந்த சேவையாற்றிய ஆசிரியைகளையும், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களில் இருந்து மிகுந்த அர்பணிப்பான சேவையாற்றி மாதர்களுக்கும், வைத்தியசாலை, பிரதேச செயலகம், அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர், பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தில் கடந்த காலத்தில் சேவையாற்றிய பெண்களுக்குமே இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பெண்ணால் முடியும் சிறப்பு கவியரங்கும் படுவான்கரை மற்றும் எழுவான்கரை கவிஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

ஒன்றியத்தின் இணைச் செயலாளர் செல்வி பு.சிவதயாளினி தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், உதவிக்கல்விப் பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆலயங்களின், அமைப்புக்கள், கலைகழகங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு 45க்கு மேற்பட்ட மாதர்கள் செம்மை மாதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்திற்கு தேசப்பிரியை விருது வழங்கி வைக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் செயலாளராக கடமையேற்று பிரதேசத்தின் வளர்ச்சியிலும், பிரதேச மண்வாசனை, பண்பாடு, உணவுப் பழக்கவழக்கம் என்பவற்றில் பாராம்பரியங்கள் கடைப்பிடிக்க வேண்டும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்தோடு செயற்பட்டமையுடன் அனைவரையும் அரவணைத்து செல்கின்றமையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி தேசப்பிரியை விருதும் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: