2 Mar 2016

மார்புப் புற்று நோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு

SHARE
அண்மைக் காலமாக பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் மார்புப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு வரும் ஞாயிறன்று 06.03.2016 ஏறாவூர் அல்-மர்கஸ{ல் இஸ்லாமி தவ்ஹீத் ஜும்மா மஸ்ஜித்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அம்பாறை அரச வைத்தியசாலையின் புற்றுநோய் விஷேட வைத்திய நிபுணர் ஏ.இக்பால் தெரிவித்தார்.
ஏறாவூரில் முதல் தடவையாக தவ்ஹீத் ஜமாஅத்தின்  ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பெண்கள் மார்பகப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வில் பங்குபற்றி அறிவுரைகளைப் பெறுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமகாலத்தில் சமூகத்தின் மத்தியில் காணப்படும் உணவுப் பழக்க வழக்கங்கள், நோய்கள் பற்றிய விழிப்புணர்வின்மை, மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அறிவின்மை என்பனவே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: