(இ.சுதா)
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழுள்ள, பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (04) மாலை வித்தியாலயத்தின் அதிபர் எஸ். பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாஇ பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் பி.தவேந்திரன்இ கல்லாறு தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் கே.சுரேஸ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பொதுமக்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுக்கள், மற்றும் மாணவர்களின் அணிநடை சுவட்டு நிகழ்ச்சிகள் பெற்றோர்களுக்கான விளையாட்டுக்கள் இடம் பெற்றதுடன் இல்லங்களின் தரப்படுத்தலில் யமுனா இல்லம், முதலாம் இடத்தையும், கங்கா இல்லம் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment