இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி, கலாபூஷணம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தழிழ்-இஸ்லாம் பாட முன்னாள் நூலாக்கக் குழு உறுப்பினருமான
ஏ.சி.ஏ.எம். புஹாரி அவர்கள் எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூலின் முதற் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட்டிடம் புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், சமூக ஆர்வலரும் அம்பாறை மாவட்ட சர்வமத சம்மேளனத்தின் இணைச் செயலாளருமான ஐ.எம். இப்றாஹிம் உட்பட இன்னும் முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
1972 ஜுலை 2 ஆம் நாள் இரவு 8.55 இற்கு இலங்கை வானொலி தேசிய சேவையில் வரலாற்றிலோர் ஏடு எனும் இந்த ஜனரஞ்சக நிகழ்ச்சி ஒலிபரப்பாகத் தொடங்கியது,
0 Comments:
Post a Comment