மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தின் கிண்ணையடி கிராத்திற்கான பெயர்பலகை இடல் நிகழ்வு வியாழக் கிழமை (03) கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்; ரி.சந்திரகாசன் தலமையில் நடைபெற்றது.
கிண்ணையடி கிராம உத்தியோகஸ்தர் க.கஜேந்திரராஜா ஆர்.டி.பி.ஓ. நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் வ.றமேஸ்ஆனந்தன் கிண்ணையடி பாடசாலையின் உப அதிபர் கே.கலைப்பிரியன் சிவில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆர்.எச்.ஆனந்த, உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுநிகழ்வு என்றால் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயற்படுவது சிறப்பான விடயம் இக்கிராமானது பழமையானது பல சாதனைகள் படைத்த கிராமம் இக்கிராமத்தின் நீண்டநாள் குறைபாடாக காணப்பட்டது பெயர் பலகை இல்லாமையேயாகும்.
தற்போது இதன் முகவரியை இலகுவாக வெளியாட்கள் அறிவதற்கும், தொடர்பு கொள்வாற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு ஆர்.டி.பி.ஓ நிறுவனத்தின் பங்களிப்பும் முயற்சியும் பாராட்டத்தக்கது என இதன்போது கலந்து கொண்ட கிராமஉத்தியோகஸ்தர் க.கஜேந்திரராஜா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment