வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை (27)மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுள்ளென்ற சூரியநேர்மை எனும் கவிதை நூலும், கூடி விளையாடுவோம் எனும் சிறுவர் நாடக நூலும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.
கூடி விளையாடுவோம் எனும் சிறுவர் நாடக நூலின் நயவுரையினை ஓய்வு நிலை அதிபரும், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் உப தலைவருமான திருமதி.இந்துராணி புஸ்பராசாவும், சுள்ளென்ற சூரியநேர்மை எனும் கவிதை நூலின் நயவுரையினை கவிஞர் வாகரை முகிலனும் நிகழ்த்தினர்.
கலாபூசணம் க.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் பிரதம அதிதியாகவும், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலய பிரதம சிவ ஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் ஆன்மீக அதிதியாகவும், கலந்து கொண்டதோடு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சி.தட்சணாமூர்தி, போரதீவுப்பற்று பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராஜசேகரம், மேலதிக மாவட்ட பதிவாளர் அ.பேரின்பநாயகம், உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வரவேற்புரையினை மதுவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி எஸ்.தங்கராசாவும், நூலாசிரியர் அறிமுக உரையினை கவிஞர் நிலாதமிழின்தானும், சிறப்புரையினை மட்.கண்ணகிபுரம் விநாயக வித்தியாலயத்தின் அதிபர் க.பிரபாரகனும், நிகழ்த்தினர்.
நூலாசிரியரின் பெற்றோரிடமிருந்து இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் நூலின் முதற் பிரதியினைப் பெற்றுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment