17 Mar 2016

கல்முனை கல்வி வலய முஸ்லிம் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி-மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில்

SHARE
(டிலா)

கல்முனை கல்வி வலய முஸ்லிம் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் ஆரம்பநாள் நிகழ்வு நேற்று (16.03.2015) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் தலைமையில் கோட்டக் கல்வி விழாக் குழுவின் செயலாளர் எம்.பி.எம்.றசீட் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
ஆரம்ப நாள் நிகழ்வின் வரவேற்புரையை அல்மனார் மத்திய கல்லூரின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் நிகழ்த்தினார். தலைமை உரையை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றது. பின்னர் உடற்கல்வி ஆசிரியர் எம்.சி.ஏ.நஸார் நன்றி உரையை நிகழ்த்தினார் இதனைத் தொடந்து போட்டி நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் முஸ்லிம் கோட்டத்தில் உள்ள 17 பாடசாலைகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். ஆரம்பநாள் நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக  வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், கொரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வி.மயில்வாகனம், ஏ.எல்.எம். முக்த்தார், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் ஆகியோரும் விசேட அதிதிகளாக முஸ்லிம் கோட்ட 17 பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர். 17 பாடசாலைகளின் கொடிகளையும் அதிபர்கள் ஏற்றிவைத்தனர்.
நிகழ்வுகளை முன்னாள் தொலைக்காட்சி அறிவிப்பளர் ஏ.ஆர்.எம்.புஹாரி, ஆசிரியர்களான அமான், யு.எஸ் சபீல் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
நாளை (18.03.2016) வெள்ளிக்கிழமை இறுதி நாள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.











SHARE

Author: verified_user

0 Comments: