திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சொந்த சம்பூர் மகா வித்தியாலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப் பட்டது.
இதனையிட்டு இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.கடந்த ஒரு ஆண்டுக்புகு முன்னர் இப்பாடசாலை விடுவிக்கப்பட்டவேண்டும் என ஜனாதிபதி முதல் மாகாண ஆளுநர் வரை எமது சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது எனக்கூறும் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தற்போதாவது விடுவிக்கப்பட்டு அம்மாணவர்கள் தமது சொந்த சூழலில் கற்றலை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததார்.
உத்தியோகபூர்வமாக பாடசாலையின் சகல உடமைகளும் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்இ மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்இ கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோஇ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்இ உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.திருகோணமலை சம்புர் மகா வித்தியாயலய்த்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ வகுப்பறைகளை சுற்றிப் பார்வையிட்டார். கடற்படையினரால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் பாடசாலை மீள ஒப்படைக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment