8 Mar 2016

மட்டக்களப்பில் கறுப்பு ஆடை தரித்து பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

SHARE
சர்வதேச மகளிர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணி என்பவற்றில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
மகளிருக்கு எதிரான வண்முறைகள், பாலியல் கொடுமைகள் உட்பட பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இவர்கள் ஏந்தியிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: