12 Mar 2016

கிழக்கின் முதலீடு எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாட்டினை தொடர்ந்து கிழக்குக்கும் தொடர்ந்தும் முதலீட்டாளர்கள் வருகை .

SHARE
கிழக்கின் முதலீடு எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாட்டினை தொடர்ந்து கிழக்குக்கும் தொடர்ந்தும் முதலீட்டாளர்கள் வருகை .

புதன் கிழமை (09) இலங்கைக்கு வருகை தந்தபகறீன் நாட்டுப் பிரதம மந்திரியின்  ஆலோசகர் (Principal Adviser & HRH the Prime Minister of Bahrain )   செய்க் சல்மான் பின் கலீபா அல் கலீபா உடைய குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினை கொழும்பு கலதாரி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர் .
இக்கலந்துரையாடலின் போது முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வளங்கள் கொண்ட பாரிய திட்டங்கள் தொடர்பான விடயங்களை அவருக்கு    எடுத்துரைத்தார் , அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள மீன்பிடித்துறை , சுற்றுலாக் கைத்தொழில் , விவசாயம் போன்ற துறைகளில் பாரிய முன்னேற்றத்தினையும் , நவீன முறையில் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு தேவையான முழு ஏற்பாடுகளையும் கிழக்கில் அமைத்துத் தருமாறு முதலமைச்சர் இக்கலந்துரையாடலின் போது கேட்டுக் கொண்டார் .
முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக செய்க் சல்மான் பின் கலீபா அல் கலீபா கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும் இவ் அழகிய நாட்டில் மிக வளமிக்க மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குவதால் பல்வேறு துறைகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை வளங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலுக்கு நகர அபிவிருத்திநீர் வழங்கல் அமைச்சர்  ரவூப் ஹக்கீம்விஞ்ஞானம் , தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டனர்




SHARE

Author: verified_user

0 Comments: