இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷ_ரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான ஐந்து வருட
மூலோபாய திட்டமிடலை தமது பொதுச் சபைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.
1.முஸ்லிம் சமூகத்தை முழுமையான பார்வையில் பார்த்து சமகாலத்தில், எதிர்காலத்தில் நிலவக் கூடிய தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கான முன் மொழிவுகளை வைக்கும் சபையாக தேசிய ஷ_ரா சபை இருக்க வேண்டும்.
2.தேசிய ஷ_ரா சபை சமூகத் துறைகளில் நிலவும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அந்த பிரச்சினையை குறைப்பதற்காக அல்லது நீக்குவதற்கான வேலைத் திட்டங்களை தமது அங்கத்துவ அமைப்புகளுக்கு பகிந்தளிப்பதுடன் நின்று விடாது அதனையும் நிர்வகித்தல், ஊக்கப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
3.கடந்த காலத்தில் தேசிய ஷ_ரா சபை இந்த நாட்டில் அடைந்த அடைவுகள் தொடர்பாக மதீப்பீடுகளை செய்துஅதனை முன்னேற்றுவதற்கான வழிவகைகளை தேட வேண்டும்.
4.தனிமனித தலைமைத்துவ ஆதிக்கத்தை தகர்த்து ஷ_ரா முறைமையிலான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உருவாக்குதல் வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: ஜே. தாரிக் மஹ்மூத்
உப தலைவர்கள்:
எஸ்.எச்.எம் பழீல்
சட்டத்தரணி சகோ. டீ. கே அஸ_ர்
பொறியியலாளர் ரீஸா யஹ்யா
பொதுச் செயலாளர்: சட்டத்தரணி மாஸ் எல். யூஸ{ப்
உதவிப் பொதுச் செயலாளர்:
எம். டீ தாஹாசிம்
எம். பார்ஸான் ராஸிக்
பொருளாளர் :ஸியாத் இப்ராஹீம்
உதவிப் பொருலாளர்: எம். ஆர். எம் ஸரூக்
0 Comments:
Post a Comment