12 Mar 2016

முன்பள்ளி என்பது கற்றலுக்கான இடம் அல்ல

SHARE
முன்பள்ளிகளில் எந்தவித கற்றல்களும் இடம்பெறமாட்டாது. மாறாக தமது பிள்ளைகளுக்கு, எழுத்துக்கள், வசனங்கள், கணக்குளகள் தெரியவேண்டும் என முன்பள்ளிகளில் கற்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். எனவே முன்பள்ளி
என்பது எழுத்துக்களையோ, வசனங்களையோ கற்பிக்கும், இடம் அல்ல மாறாக இயல்பாகவே பிள்ளைகளிடம் காணப்படுகின்ற திறங்களை வளர்த்து பாடசாலைக் கல்விக்குத் தயர் படுத்துகின்ற நடவடிக்கைதான் முன்பள்ளிச் செயற்பாடாகும்.

என பட்டிருப்புக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராசா தெரிவித்துள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட மாங்காடு கிராமத்தில் 10 இலெட்சம் ரூபாய் பெறுமதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டம் இன்று வியாழக் கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்திம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாய அதிகாரிகள், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…

முன்பள்ளிகளில் உடல், உளம் சார்ந்த ஆடல், பாடல், போன்ற நடவடிக்கைகள்தான் காணப்படும், மாறாக மூளைசார்ந்த நடவடிக்கைகள் குறைவாகக் காணப்படும்.

பாடசாலைக் கல்வியில் பிரகாசிக்கின்ற மாணவர்கள் முறையாக முன்பள்ளிக் கல்வியைக் கற்றுள்ளார்கள். பாடசாலைக் கல்வியில் தோல்வியடைந்த மாணவர்கள் முறையற்ற முன்பள்ளிக் கல்வியைக் கற்றவர்கள். எனவே முன்பள்ளியில் கற்பிக்கின்ற ஆசிரியர்க்ள மிகக் கவனமாக இருக்க வேண்டும். 

முன்பள்ளி ஆசிரியர்கள் முறைசார்ந்த ஆசிரியர்களாகச் செயற்பட முடியாது. இன்னொருவருக்குப் பொறுப்புக் கூறும் விடையங்களிலிருந்து விலகி சிறார்களிடம் காணப்படும் திறமைகளை வளர்த்து விடுபவர்களாக முன்பள்ளி ஆசிரியர்கள்   இருக்க வேண்டும். எனவே முன்பள்ளி என்பது கற்றலுக்கான இடம் அல்ல கற்றலுக்குத் தயர் படுத்தும் இடமாகவே காணப்படும்.

இது ஒருபுறமிருக்க கல்வி பொதுத்தர சாதாரண தரம், மற்றும், உயர்தரம் சித்தியடைந்தவர்களிடம், முன்பள்ளிக்கு பிள்ளைகள், செல்வதற்கு முன்னர் பெற்றோர்கள் கற்றலுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். இவ்வாறு சிறார்களுக்கு ஆரம்பத்திலே கல்வி ஊட்டுவதற்கு எந்தத பயிற்சிகளையும், பெறாதவர்கள்தான் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவற்றில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் பயிற்சி பெறாத ஆசிரியர்களிடம் கல்வி கற்க பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு, ஒரு நாளைக்கு இரண்டரை மணித்தியாலக் கல்வியை மாத்திரம்மான் வழங்க முடியும், மாலை வேளைகளில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கக் கூடாது. சிறுவர்களது மூளை மாலை வேளைகளில் கல்வி கற்பதற்குத் தயார் அற்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: