நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் கடந்த முப்பது வருட காலமாக நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பாரியளவிலான இழப்பினை எதிர் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப்பிரதேச மக்களின் வாழ்வாதார உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கைத் தொழில் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து, செவ்வாய்க் கிழமை (01) மாலை ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…. களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வங்கா சதொச ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் பல்லாயிரக்கானக்கான மக்கள் நன்மையடையவுள்ளனர். மிகவும் குறைவான விலையில் பொருட்களை கொள்ளவனவு செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமாத்திரமல்ல இப் பிரதேச மக்களின் நலன் கருதி வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன். இது தொடர்பான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரததாச அவர்களிடம் பேசி இருக்கின்றேன். இதற்கு சாதகமான பதில் கிடைந்துள்ளது. மற்றும் வெல்லாவெளி பட்டிப்பாளை பிரதேசங்களில் வீதிப்புனரமைப்பு இபோக்குவரத்து வசதிகளை துரிதமாக ஏற்படுத்தவுள்ளோம், விதவைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த எதிர்வரும் காலங்களில் பல்வேறு வேலைத் திட்டங்களை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment