கடந்த காலத்தில் யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்டுப்போயுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசம்,
மண்முனை தென்மேற்கு பிரதேசம், மண்முனை மேற்குப் பிரதேசம், மற்றும், கோறளைப்பற்று வடக்கு போன்ற பிரதேசங்களில் தலா ஒவ்வொரு தொழிற்சாலைகளை நிறுவவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) , கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (18) மாலை சந்தித்து இவ்விடையம் தொடர்பில் கலந்தரையாடியபோதே இக்கோரிக்கையினை முன்வைத்தார்.
கடந்த கல போராட்டத்தில் இணைந்திருந்தவர்களுக்கு, போதிய கல்வித்தகமையின்மை போன்ற காரணங்களினால் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதில் பாரிய சிரமம் உள்ளது. முன்னாள் பெண் போராளிகள் உட்பட்ட பலரும் வலது குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர், இவ்வாறானவர்கள் தற்போது வரைக்கும் எது வித தொழில்வாய்ப்புக்களுமிறி வாழ்ந்து வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்டுப்போயுள்ள இவ்வாறான மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொடுக்கும் முகமாக மேற்படி பிரதேசங்களில் தலா ஒவ்வொரு தொழிற்சாலைகளை நிறுவுவதன்மூலம், தொழிலில்லாப்பிரச்சனைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். என இதன்போது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வருடத்திற்குள் மேற்படி பிரதேசங்களில் தொழில்சாலைகளை அமைத்து அப்பிரதேசங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேற்படுத்தும் செயற்றிட்டங்களை முன்நெடுப்பேன் என முதலமைச்சர் தமக்கு உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் இதன்போது மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று இம்மாதத்திற்குள் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment