22 Mar 2016

சி.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல்வேறு உதவிகள்.

SHARE
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அவ்வமைப்பின் வாழ்வாதார
அபிவிருத் திதிட்டத்தின்கீழ்  வறுமைக் அப்பிரதேசத்தில், கோட்டின் கீழ் வாழுகின்ற தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில், 50 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளும், 250 விதவைகளுக்கு கோழிக்குஞ்சுகளும், வழங்கப்பட்டன.


பட்டிருப்புத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த 1000 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

சி.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு இவ்வருடம் (2016) கல்விக்காக 6 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது, அமது அமைப்பு எதுவித இலாப நோக்கமற்ற முறையில், இப்பிரதேச மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செய்பட்டு வருகின்றது, எதிர் காலத்தில் இது போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை மக்களுக்கு, மக்கள் மத்தியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்; என  இதன்போது சி.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: