மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்தின் மூத்த இலக்கியவாதியும், சிறந்த ஓவியரும், நாடக ஆசிரியரும், கல்முனை இலங்கை போக்குவரத்துச்சபை சாலையின் ஓய்வுபெற்ற முன்னாள் கணக்காளரும், பிரபல நட்சத்திர சோதிடரும், மும்மொழி புலமையாளருமான தாமோதரம் தியாகராசா செவ்வாய் கிழமை மாலை (01) கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிசிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்
திடீர் சுகயீனம் காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலையிலே இவர் மரணமடைந்துள்ளார். துறைநீலாவணை,கிராமத்தின் அவலங்களையும்,மக்களின் குறைபாடுகளையும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் தைரியசாலியான அவர்ஆங்கில பத்திரிகையில் கேலிச்சித்திரங்களை வரைந்து வந்துள்ளார்.
சிந்தாமணி, வீரகேசரி, உதயன், பத்திரிகைகளில் கவிதை,கட்டுரை, சித்திரம்,போன்ற ஆக்கங்களை கைவண்ணம் படைத்து வெளியீட்டு வந்துள்ளார்.
1943.3.10 பிறந்த அன்னார் இன்னும் ஒன்பது நாட்களின் பின்னர் 73 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் நிலையில் இறந்துள்ளார். அன்னாரின் நல்லடக்கம் புதன்கிழமை (02) பி.ப 3.00 மணியளவில் துறைநீலாவணை பொதுமயானத்தில் இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment