17 Mar 2016

நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக அதிகாரிகளுக்கு சேவை நலன்; பாராட்டு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின், செங்கலடிப் பிரிவு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக அதிகாரிகளின் சேவை நலன்களைப் பாராட்டும் நிகழ்வு புதனன்று மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. ஏ. பிரசாந் தலைமையில் நடைபெற்றது.
நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்திலிருந்து கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் மாற்றலாகிச் சென்ற அலுவலர்கள் பாராட்டப்பட்டனர்.
இவ்வலுவலகத்தில் ஓய்வு பெற்றுச்சென்ற பிரிவு உதவியாளர் எஸ்.ஈ. ரவீந்திரா, பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஆர். பிரிதிவிராஜ், பராமரிப்பு ஊழியர்கள் ஏ. பத்மநாதன் மற்றும் கே. கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் இடமாற்றம் பெற்றுச் சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆர். ரகுணன், டீ. மதியழகன் மற்றும் பராமரிப்பு ஊழியர் எஸ். கௌரிசங்கர் ஆகியோர் பராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் பிற்பாடு இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகைதந்த கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா அவர்கள் உரையாற்றும்போது

மேலும் பொதுவாக அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களின் தரத்தினை பதவி வழியில் உயர்த்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் இதனை ஏன் கூறுகின்றேன் என்றால் தான் ஆரம்பத்திலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை தனக்கு ஆரம்பத்தில் கிடைத்த பதவியில் மாத்திரம் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெறுகின்றனர். தாங்கள் மென்மேலும் பதவிகளை உயர்த்திக்கொள்ள கூடுதலான ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை இதுதான் நடைமுறையும் கூட இவ்வாறு இல்லாமல் தனது திறமைக்கேற்றாப்போல் முயற்சிகளை மேற்கொண்டு உயர்ந்து விளங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர்களான எந்திரி. எம். வடிவேல் எந்திரி. வீ.பீ.பீ.தனராஜசிங்கம் மற்றும் எந்திரி. எஸ். கணேசலிங்கம் ஆகியோரும் மற்றுமுள்ள நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டனர்

SHARE

Author: verified_user

0 Comments: