12 Mar 2016

பாடகா் கேமசிறிக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கான காசோலை

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)

சிங்கள கலைஞா், பாடகா் கேமசிரி டி அல்விஸ் தமது  மனைவி பாடகியுடன்  களுத்துறையில் தமக்கென ஒரு வீடொன்று இல்லாமல்  கஸ்டப்படுவதை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியீட்டிருந்தது. இதனை  அறிந்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச பாடகா் கேமசிறியை  அமைச்சுக்கு அழைத்து நேற்று (09) வீடொன்றை நிர்மாணிப்பதற்கான காசோலையை வழங்கி வைத்தாா்.
இவ் வீட்டை நிர்மாணிப்பதற்காக லயண் கழகம் காணிஒன்றை ஏற்கனவே அவருக்கு வழங்கியிருந்தது. தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியில் ்இருந்து 2 இலட்சம் ருபா நிதியை அமைச்சா்  சஜித் பிரேமதாச வழங்கி  இவருக்கான வீட்டை 2 மாதங்களுக்குள் நிர்மாணிக்கும் படியும்  களுத்துறை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரை பணிததுள்ளாா். 

இந் நிகழ்வில் ஊடக தகவல் துறை மற்றும்  பாராளுமன்ற விவகார அமைச்சா் கயந்த கருநாதிலக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் நந்தன குணதிலக்கவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டாா். 

SHARE

Author: verified_user

0 Comments: