2 Mar 2016

உதவி முகாமையாளரான பெண் வெட்டிக் கொலை முகாமையாளருக்கு விளக்கமறியல்

SHARE
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவில் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் அந்த அலுவலகத்திற்குள் வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளரை மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை மாவட்ட நீதிவானும், பதில் நீதிபதியுமான வி. ராமகமலன் உத்தரவிட்டார்.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியின் தாயான ராஜேந்திரன் சுலக்ஷனா திலீபன் (வயது 33) என்பவர் கடந்த 29.02.2016 அன்று அந்த அலுவலகத்திற்குள் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்;தேக நபராக மட்டக்களப்பிலுள்ள மேற்படி நிறுவனத்தில் முகாமையாளராகப் பணியாற்றும் நற்பிட்டிமுனை மயான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் (வயது 41) என்பவரை சம்பவம் நடந்த அன்றே பொலிஸார் கைது செய்திருந்தனர்

சந்தேக நபரை திங்களன்று பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது நீதிபதி இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் தொடரான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: