திருகோணமலை மாவட்டத்தில சர்வோதய அமைப்பின் நிதியுதவியினால் "மொறவெவ -கோமரங்கடவெல தேசோதய பிராதேசிய பலமண்டலய" எனும் பிரதேச மட்டத்தில் குழுவொன்றினை அமைத்து வீட்டுத்திட்டங்கள்-மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை வழங்கப்போவதாக தெரிவித்து
இன்று (30) கம்பகொட்ட விகாரை மண்டபத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வோதயம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் சில குழுக்கள் ஈடுபட்டு வருவதாக மொறவெவ பிரதேச செயலாளர் -மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி -உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
பண மோசடியில் குழுவொன்று செயற்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியலாளருக்கு நாங்கள் பொது அமைப்புக்களை உருவாக்கி மக்களின் துயரத்தை போக்கப்போகின்றோம் அதனை ஊடகவியலாளராகிய நீங்கள் மோசடி என கூறுவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறான விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரினால் தெரியப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சில சந்தேகங்களை வௌப்படுத்தியதுடன் அக்கூட்டத்திற்கு விஷேட அதிதியாக பெண்னொருவரும் -ஆனொருவரும் கலந்து மக்களுக்கு சர்வோதயம் பற்றி விளக்கப்படுத்தினர்.
அதனையடுத்து ஊடகவியலாளரினால் திருகோணமலை சர்வோதய இணைப்பாளருக்கு சர்வோதய அமைப்பினால் வீட்டுத்திட்டம் மற்றும் பல வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது உண்மையா என வினவியபோது அவ்வாறான வேலைத்திட்டங்கள் ஒன்றும் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்தார்.
பின்னர் அவசரமாக அவ்விடத்திற்கு வருகை தருமாறு ஊடகவியலாளரினால் திருகோணமலை சர்வோதய இணைப்பாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு குழுவொன்றினை அனுப்பி வைத்தனர்.
விஷேட அதிதியாக வருகை தந்த சர்வோதயத்தின் உயர் அதிகாரியென கூறிய பெண்ணும்.அவருடன் வந்திருந்த ஆனொருவரும் மொறவெவ சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்தனர்.
அவ்விடத்திற்கு சென்ற திருகோணமலை சர்வோதய குழுவினர் அப்பெண்ணை விசாரணை செய்த வேளை அவசரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு பஸ்ஸில் ஏறிவிட்டார். மக்களை ஏமாற்றி குழுக்களாக இயங்கி வந்த நபரை சர்வோதய அமைப்பினர் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்வதுடன் பஸ்ஸில் ஏறிய பெண் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 071-8664792 அல்லது 0774410679 எனும் இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment