ஒரு சில தனி நபர்களின் ஒத்துழைப்புக்களுடன், சில ஊடகங்கள் அரசாங்க அதிபர், மற்றும், பிரதேச செயலாளர் போன்றோரை பிளையான முறையில் வர்ணிக்கின்றன. இவ்வாறான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையின் 3 வது ஆண்டு நிறை விழா நேற்று புதன் கிழமை (23) களுவாஞ்சிகுடி இராசாமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
களுவாஞ்சிகுடி கிளையின் முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊவா மாகாண உதவிப் பொது முகாமையாளர் தர்மதாஸ, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், உட்பட மாவட்டத்தில் இயங்குகின்ற பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதே செயலாளர் மேலும் குறிப்பிடுகையில்….
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்; கொண்டிருக்கின்றாரக்ள். குறிப்பாக வாழ்வாதார ரீதியாக தொழில் வாய்ப்புக்களைப் பெறுதல், என்பது மிகவும் கடினமாகவுள்ளது. இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இப்பிரதேச பெண்கள் வீட்டுத் தோட்டங்களையும், தையல், போன்ற தொழில்களையும், மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தினால் பாதிப்புற்று இப்பிரதேசத்தில் 3000 விதவைப் பெண்கள் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை வாழ்வாதார ரீதியாக உயர்த்துவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை முன்வர வேண்டும்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்குடிக் கிளை ஆரம்பிக்கப்பட்ட 3 வருடத்திற்கு 40 கோடி ரூபாய் முதலீடு செய்து, 3 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இலாபம் 83 இலட்சத்தினையும், 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாவை இலாபமாக இவ்வங்கிக் கிளை பெற்றுள்ளது. எதிர் காலத்தில் இவ்வங்கிக் கிளை மக்கள் மத்தியில் சிறந்த சேவையினை மேம்படுத்த வேண்டும்.
மேலும் இப்பிரதேசத்தில் 1000 இற்கு மேற்பட்ட வலது குறைந்தவர்கள் உள்ளார்கள் இவர்களுக்குரிய மலசல கூடவசதியினை இவ்வங்கிக் கிளையிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் அமைத்துக ;கொடுத்தால் மிகவும் வாய்ப்பாக அமையும்.
இது ஒரு புறமிருக்க எமது பிரதேசத்தில் வெளி நிறுவனங்கள் புகுந்து மக்களைக் குளப்பிக் கொண்டிருக்கின்றார்கள், பல நிதி நிறுவனங்கள் 25 தொடக்கம், 37 வீதம் வரைக்கும் வட்டிக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல வாராந்தம், மற்றும் இரவு வேளைகளிலும் வட்டி அறவீடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள், இவ்வாறான செயற்பாடுகள் பாரிதொரு சுமையாக இருக்கின்றன.
வாராந்தம் வட்டி செலுத்துவதனால் பொதுமக்கள், பலத்த இன்னல்களை எதிர் கொள்வதுடன் போதிய வருமானமின்மையினாலும், ஒருவர் பல நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளதனாலும், இறக்க வேண்டிய சூழலுக்கும், அல்லது ஒழிந்து வாழ்வதற்கும், குடும்பத்தகராறுகளுக்குமுரிய சூழல் உருகின்றது.
எனவே வருடாந்த வட்டி வீதமாக எந்த வொரு பொதுமகனும் 14 வீதத்திற்குத்தான் கடன்களை நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும், இதனைவிட அதிக வட்டிக்கு கடன் பெற்றால் அது மக்களிடத்தில் ஆபத்து நேரிடும்.
இப்பிரதேசத்தில் அதிக வட்டிக்கு பணம் வழங்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் பொலிசாருடன் இணைந்து முயற்சித்த போதும், அது வெற்றியளிக்கவில்லை. ஆனால் ஒரு சில தனி நபர்களின் ஒத்துழைப்புக்களுடன், சில ஊடகங்கள் இவ்விடையங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர், மற்றும், பிரதேச செயலாளர் போன்றோரை பிளையான முறையில் வர்ணிக்கின்றன. இவ்வாறான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
எனவே பொதுமக்கள் பிரதேச அபிவிருத்தி வங்கி போன்ற குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கிகளை நாடி கடன்களைப் பெற்று வாழ்வாதார ரீதியாக முன்னேற முயற்சி செய்யுங்கள் இப்பிரதேசத்தின் செயலாளர் என்ற வகையில் நான் மக்களின் வளர்ச்சியில் என்றென்றும் பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்தார்.
இதன்போது ஒருவருக்கு 100000 ரூபாய் வீதம், 50 பயனாளிகளுக்கு வாழ்வாதாரக் கடன்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment