எமது தமிழ்த் தேசிய உணர்வு ஆரம்பித்த காலம் முதல் அக்கா அண்ணி அன்னை என்ற பல உறவுகளில் எம்மோடு கலந்தவர் இணைந்தவர் எமக்க்கு தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள். 70களில்தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு உரமாகி நீராகி தமிழ்த் தேசியத்தை அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு இணையாக வளர்த்த பெருமை அண்ணரது துனைவியா் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களுக்க உரியதாகும் தமிழ்த் தேசியம் அகிம்சை வழியில் நடந்தகாலம் அகிம்சைப் போராட்டம் வீறுகொண்டு வடகிழக்கு எங்கும் எழுச்சி கொண்டதற்கு அண்ண்ன் அமிர்தலிங்கம் அவர்களுக்கு சற்றும் குறையாத பங்கு அக்கா மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களுக்கும் உண்டு. என்பதை நேரில் கண்டு உணர்ந்து அனுபவித்தவன் நான்.
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் மறைவு குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்n(ஜனா) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
அகிம்சைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாகியதற்கும் அக்காவின் பங்கு சற்றும் குறைவானதல்ல.உருவாகிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் அன்னைக்குரிய பரிவுடன் வளர்த்தவர். தமிழ்த் தேசியம் கண்ட துன்பியல் நிகழ்வுகள் அவரையும் நிலைகுலைய வைத்தது. அவரது வாழ்வின் வேரும் விழுதும் தமிழ்த் தேசியத்தின் விடியலாகவே இருந்தது என்பதை அருகிருந்து புரின்தவன் நான்.
இது இன்று புரிய முடியாமைகூட வேதனைக்குரியதே.
எப்படியாகினும் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களதும் அக்கா அவர்களதும் வாழ்வின் அர்த்தம் தமிழ்த் தேசியம் என்பது மட்டும் உணமை. அவரது ஆத்மா தமிழ்த் தேசியத்துடன் இணைய அவரது தமிழ்த் தேசிய கனவு நனவாக நம்மை அர்ப்பணிப்போம் அதுவே அவர்க்கு நமது கைமாறு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment