ஊடகத்துறையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கடமைபுரிந்த என்.நவரட்ணராஜா (வயது 62) இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 அளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார்.
முன்னாள் கிராம நிர்வாக அலுவரான இவர் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டாா் குறிப்பாக ஜபிசி தமிழ் செய்திகளுக்கான வடபிராந்திய செய்தியாளராக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவா் கடமையாற்றியிருந்தாா். யுத்தகாலங்களில் செய்திகளை உடனுக்குடன் அனுப்பிய அவா் மக்களின் அவலங்களை செய்திகள் மூலமாக வெளியுலகிற்கு எடுத்துச் சென்றாா்.
அதேவேளை இலங்கையின் முன்னணி ஊடக நிறுனங்களின் பிராந்திய செய்தியாளராகவும் அவா் கடமைபுரிந்திருக்கிறார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று திங்கட்கிழமை கடுமையாக சுகயீனமுற்றதால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணமானார். வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவரான அவர் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட், உதைபந்தாட்ட மத்தியஸ்தராகவும் பணியாற்றியிருந்தாா். அதேவேளை தென்பகுதி சிங்கள ஊடகவியலாளா்களுடன் அவா் நெருக்கமான உறவை பேணியவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பூதவுடல் மல்லாகம், சோடா கம்பனி ஒழுங்கையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment