அறவழிப் போராட்டங்களிலும், அரசியல் பிரச்சாரங்களிலும் அமிர்தலிங்கத்துடன் முன்னின்று உழைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
லண்டனில் மரணமான திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவை யொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் கே.ராஜேந்திரா விடுது;துள்ள அவ் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக தநதை செல்வாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தளபதியாய் விளங்கிள அமிர்தலிங்கம் அவர்களை கரம் பற்றி அந் நாள் முதல் தலைவனுடன் இணைந்து தன் வாழ்வையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர்.
அறவழிப் போராட்டங்களிலும் அரசியல் பிரசசாரங்களிலுமு; முன்னின்று உழைத்தவர் அன்னாரின் மறைவுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
0 Comments:
Post a Comment