வாழைச்சேனை போலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவலடியில் வெள்ளிக்கிழமை (26) இலவச மருத்துவ முகாம், ஒன்று இடம்பெற்றது ஒ .சி.சி -95 நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு எம்.அனஸ் (இலங்கைக்கான தூதுவராலயம்-குவைத்)அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்
இந்நிகழ்வில் கோறளைபற்று வடக்கு ,கோரளைபற்று மத்திய பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுடன் இப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் அரபி கலாசாலை மாணவர்களும் வந்து சிகிச்சை பெற்று கொண்டதுடன் இலவச மருந்துகளையும் கிடைக்கப்பெற்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இவ்வமைப்பின் தலைவர் " ஏற்கனவே கடந்த முன்று வருடங்களாக இயங்கும் இந்த ஒ .சி.சி 95 நண்பகல் வட்ட அமைப்பானது ,தமது சேவைகளை காவத்தமுனை, பாலை நகர் , செம்மனோடை போன்ற கிராமங்களில் வழங்கி உள்ளதாகவும் , மேலும் எதிர்வரும் ஒரு சில மாதங்களில் வெவ்வேறு கிராமங்களுக்கு சென்று , இவ்வாறான இலவச மருத்துவ முகாம்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இப்பிரதேசத்தில் சேவையாற்றும் மருத்துவர்களான எம்.எச்.எம்.முஸ்தபா, ஏ.யு.எம்.கலாம், பி.எம் பிர்னாஸ் ஆகியோருடன் அனுசரணை வழங்கிய ஜனாப் எம் . அனஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment