(இ.சுதா)
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்துள்ள “அவள் இல்லாத உலகம் எனும்” பொனப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை கல்முனை கிரிஸ்டா
அல்லத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள்இ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய புலனாய்வு உத்தியோகத்தர்கள்இ மதத்தலைவர்கள்இ சிவில் சமூகப் பிரதிநிதிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குடும்ப நல சிறுவர் நன்நடத்தை திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இ ஆசிரியர்கள் இ மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மகளிர் தினம் தொடர்பான விளக்கவுரைகள் இ கவிதைகள் இ வில்லுப்பாட்டு மற்றும் பல துறைகளிலும் சாதனை புரிந்த மகளிர் பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment