விபத்தில் சிக்கிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாளிகைக்காடு புதிய தபாலக வீதியைச் சேர்ந்த சீனிமுஹம்மது றிபாயிஸ் (வயது 26) என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து விட்டதாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 14 ஆம் திகதி மாளிகைக்காடு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இவர் சிக்கியிருந்தார்.
இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட நிலையில் இவர் வெளிக்காயங்கள் எதுவுமின்றி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment