15 Mar 2016

பகிரங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர் கிளை நிருவாகத் தெரிவு

SHARE
பகிரங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க் கிளைக்கான புதிய நிருவாகத் தெரிவும் தீர்மானங்கள் நிறைவேற்றலும் ஞாயிறன்று 13.03.2016 ஏறாவூர் அறபா மகா வித்தியாலயத்தில் பகிரங்க சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சொலமன் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.
ஏறாவூர் கிளையின் புதிய தலைவராக எம்.கே. முகைதீன்,  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உப தலைவராக எஸ்.எம். மீராமுஹைதீன், செயலாளராக எஸ்.எம். சுலைமாலெப்பை, உதவிச் செயலாளராக ஏ.சி.எம். சயீட், ஆகியோருடன் நிருவாகக் குழுவுக்கு எம்.எஸ்.எம். அபுல் ஹஸன் மற்றும் எம்.எஸ்.எம். பாறூக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள புதியவர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்தல், சங்க அங்கத்தவர்களினதும் அவர்களது பராமரிப்பிலுள்ளவர்களினதும் நலனோம்பு விடயங்களில் கவனம் செலுத்துதல், ஓய்வூதியர்களுக்கு அரசினால் வழங்கப்படும் நன்மைகளைத் தங்கு தடையின்றிப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டதாக அதன் செயலாளர் எஸ்.எம். சுலைமாலெப்பை தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: