களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட மார்க்கட் வீதியில் அமைந்துள்ள சில்லறைக்கடை ஒன்றில்( கலா ஸ்ரோஸ்) விற்பனை பிரதிநிதி வேடத்தில் வந்தநபர் கல்லாவுக்கள் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தினை களவாடிச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் மா.தம்பிரசா தெரிவித்தார்.
இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அவர் இச் சம்பவம் தொடர்பாக கூறுகையில்
வழமைபோன்று காலையில் கடையைத் திறந்து பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தேன் முச்சக்கர வண்டியில் மூவர் வந்தனர் அதில் ஒருவரை எனது கடை முன்பாக இறக்கிவிட்டு முச்சக்கர வண்டி சென்றுவிட்டது. இறங்கிவந்தவர் ஒரு பால்மாவின் பெயரினைச் சொல்லி அதில் விற்பனை பிரதிநிதியாக நான் பணிபுரிகின்றேன், உங்கள் கடையில் விளம்பரம் ஒட்ட முடியுமா எனக் கேட்டார் அதற்கு நான் உங்கள் பால்மாவை நான் விற்பனை செய்வதில்லை எனவே ஒட்டமுடியாது எனக் கூறினேன்.
கூறியவாறே கலையில் வந்தவர்களுக்கு வியாபாரம் செய்வதிலும் கடைப் பொருட்களை ஒழங்கு செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இதேவேளை முதல்நாள் வியாபாரம் செய்தபணத்தினை நான் கல்லாவில் இடும்போது பார்த்துக் கொண்டிருந்தார் இந் நிலையில் உள் சென்று பொருட்களை வெளியில் தூக்கிவரும் போது கடைக்குள் நின்றவரைக் காணவில்லை இதனை நான் பொருட்படுத்தவில்லை பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் ஒருவருக்கு பொருளினை விற்றுவிட்டு மீதிப்பணம் கொடுப்பதற்காக கல்லாவைத் திறந்த போது அங்கிருந்த பணத்தினைக் காணவில்லை.
குறித்த நபரினை தேடினேன் கண்டு கொள்ளவில்லை உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை மேற் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்தார்இது தொடர்பான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்
….
0 Comments:
Post a Comment