புடவை வடிவமைப்பு சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்த மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பாலமுனையில் அமைக்கப்பட்டுள்ள புடவை வடிவமைப்பு சாயமிடல் மற்றும் சேவைகள் நிலையத்தினை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரசேத்தில் (28.2.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்
அரசியலிலும் சிறந்த அரசியல் கலாசரம் இருக்க வேண்டும். ஆனால் கிழக்கு மாகாணத்திலே ஒரு விதமான அரசியல் காசாரம் நடக்கின்றது.நாங்கள் செய்யாததை சொல்வதில் உடன் பாடுகிடையாது. புதிய வீடொன்றை கட்டியவர்களுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள முதல்வர்கள் வந்து அந்த வீட்டை திறந்து விடுவார்கள். என்ற அச்சம் எனது பிரசேத்திலுள்ள மக்களுக்கு இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலையிலேதான் இந்த கிழக்கு மாகாணத்தின் அரசியல் கலாசாரம் இருக்கின்றது. கைத்தறி நெசவார்கள் நிரம்பிக்காணப்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் இருந்தது.
கடந்த காலங்களில் காத்தான்குடியும் கைத்தறிக்கு ஒரு பெயர் போன பிரதேசமாக காணப்பட்டது. அம்பாரை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் மைய்யப்படுத்தி ஆறு கோடி ருபா செலவில் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சு இந்த நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
இதனை சரியாக பயன் படுத்துவதன் மூலம் எதிர் காலத்திலே ஒரு முன்னேற்றகரமான வாழ்வாதாரத்தினை அடைந்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக பொருத்தமான இடத்தை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவு செய்திருக்கின்றார். இதன் மூலம் மருதமுனை பிரதேசம்இ மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் எல்லாமே ஒற்றுமைப்பட்டு இந்த நிலையத்தின் ஊடாக அதிக நன்மையை அடையக் கூடிய திட்டமாக இந்த திட்டம் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பெரிய கைத்தறி வளம் இந்த நிலையமாகும். இந்த வளத்தை அதிகம் அதிகம் பயன்படுத்தும் மக்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் புடவைக்கு சாயமிடுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இன்று அந்த சந்தர்ப்பம் நெசவு கைத்தறியாளர்களின் காலடிக்கு வந்துள்ளது.
அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் நாடுமுழுவதிலும் இவ்வாறான பணிகளை செய்து வருகின்றார். சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர் என பாகுபாடு பார்க்காமல் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் இந்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இன்றிலிருந்து இங்கு வழங்கப்படும் தொழில் உபகரணங்களை பயன்படுத்தி அதே போல இங்கு தரப்பட்டுள்ள உபகரணங்களைப் பயண்படுத்தி வாழ்வதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்
இந்த நிலையில்தான் இந்த நிலையம் திறப்பதற்கு அடிப்படைக்காரணம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள்தான் என்பதை இங்கு பெருமையுடன் கூறி வைக்க விரும்புகின்றேன். அதற்காக சரியான இடத்தினை தெரிவு செய்தமைக்காக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி கூற கடமைக்கப்பட்டுள்ளேன் என்றார்.
0 Comments:
Post a Comment