20 Mar 2016

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்கு மோசடி நடைபெற்றுள்ளது – சிறிநேசன் எம்.பி.

SHARE

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அப்போதிருந்த அரசினால், மோசடி நடைபெற்றதாக நாம் அறிகின்றோம். அப்போது வாக்கு மோசடி நடைபெற்றதன் காரமாக 3 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்திருக்கின்றது.
 என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்ளப்பு மாவமட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுமுந்தன்வெளிக் கிராமத்தில் வெள்ளிக் கிழமை (18) இடம்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….  

புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்குரிய செயற்பாடுக்ள நடைபெற்று வருகின்றன இந்நிலையில் எமது மக்களை சமத்துவமான முறையில் முன்கொண்டு செல்ல வேண்டியள்ளது. இந்நிலையில்தான் இரா.சம்மந்தனின் சீரான தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. எமது சுய நிர்ணயம் தொடர்பிலும், எமது மண்ணை பிறர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காக புதிய தீர்வுத்திட்டம் பற்றி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. 

மட்டக்களப்பில் 74 வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள், 26 வீதம் முஸ்லிம் மக்கள் உள்ளார்கள்.  இதனடிப்படையில் விகிதாசாரத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பிர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும், முஸ்லிங்களுக்கு 1 ஆசனம் கிடைக்க வேண்டும். நாங்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பறித்து எடுப்பதற்கு விரும்புவதில்லை. இதேபோன்று எமது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து எமது வாக்குப்பலத்தை குறைக்க வேண்டும் என்ற சிந்தனை முஸ்லிம் மக்களுக்கு இருக்கக் கூடாது. 

இந்நிலையில்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்திருக்கும், எமது ஒரு சில தமிழ் சகோதரர்களின் செயற்பாட்டினால் எமக்குக் கிடைக்கவிருந்த மேலுமொரு ஆசனம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாறாக தமிழ் மக்களினதும், வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதியமைச்சர்களாக இருந்து கொண்டு தமிழ் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல் அவர்களுடைய பிரதேசங்களுக்கே அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

நாம் வரிப்பணங்களை அரசுக்குச் செலுத்துகின்றோம், அதற்குப் பிரதியுபகாரமாக எமக்கு அரசு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. அவற்றுக்காக வேண்டி அரசியல் வாதிகள் அவர்களது சட்டைப் பைகளுக்குள் இருந்து அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார்கள் என்பதை எமது மக்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது. அமைச்சர்களை நன்றாக வரவேற்று, அபிவிருத்திகளைப் எமது மக்கள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆனால் வாக்களிக்கும்போது மாத்திரம் மிக மிக கவனமாக செயற்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் எமது மக்கள் விட்ட தவறினால்தான் கிழக்கு மாகாணசபையில் எமக்கு தனியாக ஆட்சியமைக்கும் நிலமையும், முதலமைச்சர் பதவியும், பறிபோயுள்ளது. 

ஏனைய இன மக்கள் அவர்களது சமூகம் சார்ந்தவர்களு;ககுத்தான் வாக்களிப்பார்கள் மாறாக எமது தமிழ் மக்கள் மாத்திரம்தான் எமது இனம் சார்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல், ஏனையவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள் இந்த நிலமை மாற்றமடைய வேண்டும்.

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுப்போயுள்ள படுவான்கரைப் பிரதேசம் அபிவிருத்தியின்பால் ஈர்க்கப்பட வேண்டும். இவை இடம்பெறவில்லை. 

இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அப்போதிருந்த இருந்த அரசினால், மோசடி நடைபெற்றதாக நாம் அறிகின்றோம். அப்போது வாக்கு மோசடி நடைபெற்றதன் காரமாக 3 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்திருக்கின்றது.   

எனவே தமிழ் மக்களும். முஸ்லிம் மக்களும் வடகிழக்கில் ஒற்றுமையுடன் சேர்ந்து செயற்பட்டால் மாத்திரமே பேரினவாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும், இல்லாவிட்டால் தமிழ், மற்றும் மஸ்லிம், ஆகிய இரு சிறுபான்மை இனங்களும் தெருவில் நிற்கவேண்டிய நிலமை ஏற்படும் என அவர் தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: