மட்.பட்.தும்பங்கேணி கண்ணகி மகாவித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா எதிர்வரும் திங்கட் கிழமை (21) மு.ப 8.31 மணியளவில் தும்பங்கேணி கண்ணகி மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு எழுவான் நியூஸ் இணையத்தளம் ஊடக அனுசரனை வழங்குகின்றது.
வித்தியாலய அதிபர் வே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும், முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் மா.உலககேஸ்பரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் உட்பட கல்வி அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் என பலரும் காலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment