26 Mar 2016

லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

SHARE

(இ.சுதா)


லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (26) முற்பகல் 11.30 மணியளவில் துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் நகுலேஸ்வரி கலையரங்கில் வித்தியாலயத்தின் அதிபர் சு.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கவிஞரும் இஓய்வு நிலை அதிபருமான கா.செல்லத்துரை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், கு.சுகுணன் மற்றும் வைத்தியக் கலாநிதி எஸ்.வாசுதன் உட்பட லயன்ஸ் கழகத்தினை பிரதி நிதித்துவப் படுத்தும் வகையில் வைத்திய அதிகாரிகள் உட்பட ஆசிரியர்கள் இமாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் லயன்ஸ் கழகத்தினரால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: