30 Mar 2016

கஞ்சா சுருட்டுடன் இரு வாலிபர்கள் கைது

SHARE
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவில்; செவ்வாய் இரவு கஞ்சா சுருட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கல்முனைக் கடற்கரைப் பள்ளி வீதியிலுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மறைவாக இருந்து கஞ்சா சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 18 வயது மற்றும் 19 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.
 
சந்தேக நபர்கள் பாழடைந்த கட்டிடத்தில் மறைவாக ஒழிந்திருந்து கஞ்சா பாவிக்கிறார்கள் என்று பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் தீடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது இருவர் தலா ஒவ்வொரு கஞ்சா சுருட்டுடன் கைது செய்யப்பட்ட அதேவேளை மற்றுமிருவர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அம்பாறை போதைப் பொருள் தடுப்பு இரகசியப் பொலிஸாரின் பணிப்பின் பேரில் கல்முனைப் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸாரும் கல்முனைப் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவங்கள் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்;ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: