12 Mar 2016

பலத்த வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு.

SHARE
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தச்சிமடம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு அனாதரவாகக் கிடந்த நபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியச்சகர் கு.சுகுணனின் செயற்பாட்டால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

இன்று சனிக்கிழமை (12) மாலை ஓந்தச்சிமடம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிசாருடன் விரைந்த குழுவினர், பாதிக்கப்பட்டிருந்த நபரை மீட்டு வைத்தியசாலையின் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஜெகன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு, உடம்பின் பல பகுதிகளிலும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: