மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட எருவில் திவிநெகும வங்கியூடாக 16 கிரமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 9 கோடி ரூபாய் சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளர் பா.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.
திவிநெகும வங்கிச் சங்கங்களை பனரமைக்கும் கூட்டம் மகிழூரில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்
இதனை விட வெளிநாடு சென்றவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்தவர்களுக்கு வீடு திருத்துவதற்காக கடனாக 207 பயனாளிகளுக்கு மூன்றுலட்சம் ரூபாய் வீதம் 6 கோடி 21 லட்சம் ரூபாய்யாகும் வழங்கியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய கடனை வழங்கிய வங்கியாக எமது வங்கி காணப்படுகின்றது. இவை அனைத்தும் குறைந்த வட்டியிலையே வழங்கப்படுகின்றது இருந்தும் வேறு நிறுவனங்களிடம் கூடிய வட்டியில் கடனைப் பெறுவதற்க நீங்கள் எத்தணிக்கக் கூடாது எமது வங்கியில் பெறப்பபடும் கடனினை சரியான விதத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்…
0 Comments:
Post a Comment