கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்துக்கு ஊடாக கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொங்கிறீற் வீதியும் அதனோடு இணைந்ததாக வடிகானும்
அமைக்கப்பட்டு மக்களின் பாவினைக்கு கையளிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இதற்கமைவாக திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்சோலைக் கிராமத்தில் சுமார் 5 மில்லியன் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட 750 மீற்றர் நீளமான கொங்கிறீற் வீதியும் அதனோடு இணைந்ததாக 750 மீற்றர் நீளத்துக்கு வடிகானும் அமைக்கப்பட்டு புதன்கிழமை 16.03.2016 கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சர் சி. தண்டாயுதபாணியால் கிராம மக்களிடம் கையளிக்;கப்பட்டன.
மேலும் இதுபோன்று திருகோணமலை மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் நொச்சிக்குளம். சாந்திபுரம் ஆகிய இரு கிராமங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் மணற்சேனை கிராமத்திலும் தலா 50 இலட்ச ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வேலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிதி கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சர் சி. தண்டாயுதபாணியால் 2105 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டில் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்துக்கு ஊடாக கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும்.
0 Comments:
Post a Comment