12 Mar 2016

கல்கிசையில் 4 மாடிகளைக் கொண்டதொரு கல்விசாா் மற்றும் கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)

ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள விரிவுரை மற்றும் பேராசிரியா்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக  கல்கிசையில் 4 மாடிகளைக் கொண்டதொரு  கல்விசாா்  மற்றும் கற்கை நிலையம் மீள நிர்மாணிக்கப்பட்டு உயா்கல்வி இராஜாங்க அமைச்சா் மோகன்லால் கெயிருவினால் திறந்து வைக்கப்பட்டது.. இந் நிகழ்வுகள் தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்  உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம் நாஜீம் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஸ்ரப் அவா்களினால்  20 வருடங்களுக்கு முன் இந் நிலையம் கல்கிசையிலும் ஒரு கற்கை பயிற்சி நிலையம் அன்று உருவாக்கப்பட்டது.  முன்னாள் அமைச்சரும் குவைத் நாட்டின் துாதுவராகவும்  கடமையாற்றிய ஏ. ஆர். மண்சூா்  அவா்கள் காலத்தில் இப் பல்கலைக்கழககத்திற்கு நிதி பெறப்பட்டது.  அதன் நிமித்தமே இக்  கட்டிடத்தினை மீள நிர்மாணிப்பதற்கு  குவைத் அரசாங்கம் 64.85 மில்லியன் ருபாவை வழங்கியிருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதற்கு உதவிய முன்னாள் உபவேந்தா்களுக்கும்  பேராசிரியா் நாஜீம் பல்கலைக்கழகம் சாா்பாக நன்றிகளைத்  தெரிவித்தாா்.

இங்கு உரையாற்றிய உயா் கல்வி அமைச்சா்  மோகான் லால் கெயிரு தெரிவித்தாவது -

மறைந்த அமைச்சா் எம்.எச்.எம். அஸ்ரப் அவா்களின் என்னக் கருவில் உருவான  இந்த தென் கிழக்கு பல்கலைக்கழகம் தற்பொழுது தேசிய பல்லைக்கழகங்கள் 17 உடன் சோ்ந்து உயா்  கல்வித்துறையில் பாறிய சேவையைச் செய்து வருகின்றது.தற்பொழுது  ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு பல்கழைக்கழகமும் பட்டதாரிகளை அனுமதி வழங்கும் போது 10 வீதமாக அதிகாரிததால்  2020ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள 17 பலக்கலைக்கழகங்களும் 35ஆயிரம் மாணவா்காள அதிகரிக்க முடியும். ஒரு வருடத்தில் 120  மாணவா்களை அதிகரித்தல் வேண்டும்.  ஆனால் எமது நாட்டில் உயா்தரப்பரீட்சையை ஆகஸ்டில் எழுதி விட்டு பல்கலைக்கழக செல்லும் வரை மாணவா்கள் ஒன்றரை வருடம் காலத்தினை வீனாடிக்கின்றாா்கள். இதனால் தணியாா் பல்கலைக்கழகங்கள் இம் மாணவா்களை கவா்ந்து குறைந்த காலத்தில் பட்டப்படிப்பினைத தொடர அனுமதிக்கின்றனா். இந்த குறைபாட்டை நிவா்த்தி செய்வதற்காக அண்மையில் பல்கலைக்கழக கல்வியலாளா்களின் பேச்சுவாா்த்தை நடாத்திய முடிபு வெளியானதும் நவம்பா் மாத்தில் கல்வியை தொடரக்கூடிய வசதிகளை செய்து வருகின்றோம். 

அத்துடன் பல்கலைக்கழககங்களினது தரமான கல்வியை பரீசீலிப்பதற்கு வெளிநாட்டு கல்வியலாளா்களினால் திட்டம் வகுக்கப்படுகின்றது. அத்துடன் புதிய என்.வி.கி.டெக் பல்கலைக்கழகம  மூலம்  தரம் 5 ., பட்டப்படிப்பு தரம் 6 விசேட பட்டம் தரம் 12 வரை  பி.எச்.டி .படிப்பை பயிலக் கூடிய சா்ந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் எமது நாட்டில்  மக்களது வரிகளில் ஆரம்பம், சிரேஸ்டம் வரை இலவசமாகக் கற்று பல்கலைக்கழக கல்வியை இலவசமாகக் கற்று பட்டதாரியானதும் இலச்சக் கணக்கானோருக்கு அரசாங்கமே சம்பளம் வழங்கி  அரச தொழிலும் வழங்க வேண்டும் என எமது கல்விச் சமுகம் சிந்திப்பது நல்லதல்ல.  நாம் அரச செலவில் இலவசக் கல்வி கற்று நாம் அக் கல்வி ஊடாக இந்த நாட்டுக்கும் சமுகத்திற்கும் சொந்தமாக தொழில் செய்து தொழில் விற்பண்னா்களாக மாறி நாம் மற்றவருக்கு தொழில் வழங்குணா்களாக மாறல் வேண்டும். அ ந்த வகையில் எமது கல்வி தொழில் நுட்ப கல்விகளை மாற்றிக் கொள்ளல் வேண்டும் எனவும் உயா்கல்வியமைச்சா் மோகான் லால் கெயிரு அங்கு உரையாற்றினாா்.    






SHARE

Author: verified_user

0 Comments: