ஒருங்கிணைவுக்கு ஊடாக அறிவை விருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வது சர்வதேச மாநாடு வியாழக் கிழமை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தலைமையில் ஆரம்பமானது.
வெள்ளிக் கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் மனிதவளமும் சமூகவியல் விஞ்ஞானமும், விவசாயமும் உணவுப் போஷாக்கும், சௌக்கியப் பராமரிப்பும் விஞ்ஞானமும், வர்த்தக தொழில் முயற்சியாண்மை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்களில் ஆய்வும் அறிவுப் பகிர்வும் இடம்பெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஊக்குவிப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சந்திரசிறி, கிழக்குப் பல்கலைக் கழக பயிராக்கவியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் மாநாட்டின் இணைத் தலைவருமான கலாநிதி தயாமினி ஹெரால்ட் சேரன், கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழித்துறைத் தலைவரும் மாநாட்டு இணைத் தலைவருமான கலாநிதி ஜே. கென்னடி, மற்றும் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சறோஜினிதேவி மகேஸ்வரநாதன் உட்பட விரிவுரையாளர்கள், துறைத் தலைவர்கள், ஆய்வாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக் கழக வெளியீடுகளின் பதிப்பாசிரியர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment