15 Mar 2016

ஏறாவூர் 4 ஆம், 5 ஆம் குறிச்சி மற்றும் எல்லை நகரை உள்ளடக்கியதாக புதிய வர்த்தகர் சங்கம் உதயம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரில் ஏறாவூர் 4ஆம், 5ஆம் குறிச்சிகள், மற்றும் எல்லை நகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக புதிய வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய சங்கத்தின் செயலாளர் எஸ். சண்முகம் தெரிவித்தார்.

ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை மாலை ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த கூட்டத்தின்போது புதிய வர்த்தக சங்கம் அமைப்பது பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டு புதிய வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு நிருவாகிகளும்; தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அதிதியாகப் பங்கேற்றிருந்தார்.

புதிய வர்த்தகர் சங்கத்தின் தலைவராக ரீ. செல்வராஜ், உப தலைவர் ஜே. அன்ரனி, செயலாளர் எஸ். சண்முகம், உப செயலாளர் ஐ. மர்சூக், பொருளாளர் வி. பிரகாஸ், கணக்காய்வாளர் செல்வி கே. ரஞ்சினி, அத்துடன் 11 பேர் கொண்ட நிருவாக சபையும் போசகர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பி. கஜேந்திரகுமார், எஸ். ஜெகன், வி. பாக்கியராசா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: