பிரதேச அபிவிருத்தி வங்கி களுவாஞ்சிகுடி கிளையின் 3 வது ஆண்டு நிறை விழா புதன் கிழமை (23) களுவாஞ்சிகுடி இராசாமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தி வங்கி களுவாஞ்சிகுடி கிளையின் முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊவா மாகாண உதவிப் பொது முகாமையாளர் தர்மதாஸ, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், உட்பட மாவட்டத்தில் இயங்குகின்ற 7 பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஒருவருக்கு 100000 ரூபாய் வீதம், 50 பயனாளிகளுக்கு வாழ்வாதாரக் கடன்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை ஆரம்பிக்கப்பட்டு 3 வருடத்திற்கு 40 கோடி ரூபாய் முதலீடு செய்து, 3 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இலாபம் 83 இலட்சத்தினையும், 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாவை இலாபமாக இவ்வங்கிக் கிளை பெற்றுள்ளது.
இவ்வங்கிக் கிளையில் 50000 ரூபாய் தொடக்கம் 100000 ரூபாய் வரையிலான வாழ்வாதாரக் கடன் வசதிகள், தங்க நகை அடகுச் சேவை, சேமிப்பு, நிலையான வைப்பு, மகளிருக்கான விசேட சேமிப்புக் கணக்கு, சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்கு போன்ற ஏனைய இதர செயற்பாடுகளும், இடம்பெறுவதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையின் முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ் தெரிவித்தர்.
0 Comments:
Post a Comment